தஞ்சை மே 11: கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய ஆணையர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஆனந்தராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அன்னை கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு 500 நபர்களுக்கு பயன்படக்கூடிய சிகிச்சை பெறுவதற்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்