தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி, பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் முகக் கவசம் அணிவது பற்றியும், சமூக இடைவெளியை பின்பற்றுவது பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

நகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு வீடியோ விளம்பரம் வெளியிடப்பட்டது. தாசில்தார் தரணிகா, டிஎஸ்பி புகழேந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/