தஞ்சை ஏப்ரல் 10 தஞ்சை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது சுற்று அதிகரித்துள்ளது இன்று 10 தேதி முதல் தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அங்குள்ள பயணிகளிடம் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதியவர் ஒருவர் மாஸ்க்கை போட்டுக் கொள்ளாமல் பாக்கெட்டுக்குள் வைத்து இருந்ததை பார்த்த ஆட்சியர் கோவிந்தராவ் பெரியவரே பாக்கெட்டில் வைக்கக் கூடாது, முகத்தில் மாட்டுங்க, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது என்றார், அதனை தொடர்ந்து ஒரு பேருந்தில் ஏறிய பயணிகள் எல்லோரும் மாஸ்க் வைத்துள்ளீர்களா மாஸ்க்கை எடுத்து முகத்தில் மாட்டுங்க நான் பேருந்தை விட்டு கீழே இறங்கிய உடன் நீங்களும் மாஸ்க்கை முகத்தை விட்டு எடுத்து விடாதீர்கள் என்றார்.

அதனைத் தொடர்ந்து பேருந்தின் நடத்துனரிடம், டிரைவரிடமும் அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்று கூறினார் தொடர்ந்து பேருந்து நிலையம் எதிரே நடந்த கரோனா சிறப்பு முகாம் ஆய்வு செய்தார் முன்னதாக பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிகரித்துக் கொண்டு வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பாக எங்கெல்லாம் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது தினசரி மாவட்டத்தில் 68 மருத்துவ முகாம்கள் நடந்துவருகின்றன.

நாளொன்றுக்கு 2,500 கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது 45 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வமாக வந்து கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது அந்த அளவிற்கு இந்த இரண்டாவது அலையும்போது நீங்கள் அனைவரும் வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.