பட்டுக்கோட்டை மே 04 : பட்டுக்கோட்டையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தரமில்லாத உணவுகள் வழங்கப்படுவதாக கொரோனா நோயாளிகள் குற்றம்சாட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தரமான உணவுகள் வழங்ப்படுவதில்லை. எனவே முறையாக உணவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 50க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணிகா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கொரோனா நோயாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் உணவு ஒப்பந்தக்காரரை மாற்றி தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்