தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 506 பேர் பலியாகி உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 797 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் கொரோனாவலிருந்து 260 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 737 ஆக உயர்ந்தது. தற்போது 7ஆயிரத்து 637 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை 506 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோல் திருவாரூரில் இரண்டு பேர், நாகையில் 9பேர், தஞ்சையில் 4பேர் என மொத்தம் டெல்டா மாவட்டத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் மிகத்திறம்பட இந்த கொரோனா தொற்று கட்டுபடுத்துதலில் செயல்பட்டு வருகின்றார். ‍‍சென்ற வாரவாக்கில் ஒரு நாளைக்கு ஆயிரம் தொற்று நோயாளிகளை கண்டறிந்த நிலையில், இப்போது 800க்கும் குறைவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‍செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்