தஞ்சை ஏப்.12, தஞ்சை கீழவாசல் ராமசாமி பேட்டையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை முன்னிட்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் நோக்கத்தோடு தஞ்சை மாவட்ட நிர்வாகம், தஞ்சை மாநகராட்சி நிர்வாகமும் முழுமூச்சாக இறங்கி கிராமம் நகரம் மாநகரம் முழுவதும் கொரோனா இப்பரிசோதனை சமூக இடைவெளி, கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ,தகவல்கள் நாளுக்கு நாள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் ராமசாமி பேட்டையில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது உடனே மாநகராட்சி நிர்வாகம் கீழவாசல் ராமசாமி பேட்டைக்கு சென்று தெருக்கள் முழுவதும் சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளித்தனர்.

வீடு வீடாக கொரோனா பரிசோதனை உடல் வெப்பநிலையை கண்டறிதல், சளி, இருமல், காய்ச்சல், போன்ற அறிகுறிகள் இருக்குதா என்று விசாரித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள் கொரோனா தொற்று ஏற்பட்ட இருவரையும் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை