தஞ்சை சூலை 07: தஞ்சை மாவட்டம் திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 4 ஊர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது;. இதையடுத்து அந்த 8 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், கணேசன், நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, சந்துரு, மஞ்சு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று தெருக்கள் முழுவதும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பரிசோதனை செய்துகொள்ளவும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினர். மேலும் திருவையாறு தாலுக்காவில் மேலப்புனவாசல், கீழப்புனவாசல், திருவையாறு, விளாங்குடி, ஒலத்தேவராயன்பேட்டை, நடுக்காவேரி ஆகிய 6 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 213 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/