தஞ்சை ஏப்ரல் 01 தஞ்சையில் மேலும் ஒரு பள்ளியில் மாணவிகள் ஆசிரியர்கள் 10 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 294-ஆக அதிகரிப்பு.
தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 100 தாண்டியுள்ளது. இதற்கிடையே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தில் 16 பள்ளிகள், 6 கல்லூரிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என இதுவரை 284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் தஞ்சையில் உள்ள ஒரு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8 மாணவிகள், 2 ஆசிரியைகள் என 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத் அவர்கள் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பள்ளிக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பள்ளி, கல்லூரிகளில் 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாணவர்கள், ஆசிரியர்கள் என 247 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.