தஞ்சை சூன் 11: தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் ஒரே தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் ‍அலை இந்தியா முழுவதும், மற்றும் தமிழ்நாட்டிலும் அதிகம் நகர் புறங்களில் தான் பாதிப்பை உண்டாக்கியதை நாம் பார்த்தோம் ஆனால் இரண்டாவது அலையானது நகரங்களை தாண்டி சிறு நகரங்கள், சிற்றூர் என எல்லா இடங்களிலும் தாக்கியுள்ளதை காண முடிகின்றது.

திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 15 ஊர்களில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 43 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதில் வளப்பக்குடி ஊராட்சியில் ஒரே தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தெருவை திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஆர்ஐ -கள் சந்துரு, மஞ்சு, சாந்தி மற்றும் விஏஓ, ஊராட்சி செயலர் ஆகியோர் பார்வையிட்டு சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தெருவை அடைத்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்