தஞ்சை ஜன 30ல் தியாகராஜ ஆராதனை விழா வருகிற 1ஆம் தேதி தொடங்குகிறது விழாவில் பங்கேற்கும் வித்வான்கள் கலைஞர்களுக்கு ஒரு பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை இணை கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தினார்.

பிப்ரவரி 2ஆம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா தஞ்சையை அடுத்த திருவையாறு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது இந்த ஆண்டிற்கான தியாகராஜரின் 174 நான்காவது ஆராதனை விழா வருகிற 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன.

ஆராதனை விழாவை யொட்டி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசியதாவது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விழாவிற்கு வருபவர்கள் கைகளைக் கழுவ தண்ணீர் குழாயுடன் கூடிய தொட்டிகளும் கிரிமிநாசினி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுற்றுவட்டாரத்தில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும் குடிநீர் வசதி தற்காலிக கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் விளம்பர பதாகைகள் அகற்ற வேண்டும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விழா நடைபெறும் இரண்டு நாட்களும் திருவையாறு அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் விழாவிற்கு வரும் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனாபரிசோதனை செய்யவேண்டும்.

விழாவில் பங்கேற்கும் வித்வான்கள் கலைஞர்களின் பட்டியலைக் கொண்டு முதல் நாளன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உடனுக்குடன் முடிவுகளை தெரிவிக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் வித்வான்கள் கலைஞர்கள் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்.

தஞ்சை பழைய பஸ் நிலையம் புதிய பஸ் நிலையம் திருக்காட்டுப்பள்ளி கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் இவ்வாறு கலெக்டர் கோவிந்தராவ் கூறினார் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது சுப்பையன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஊரக வளர்ச்சித் துறை சுகாதாரத் துறை அலுவலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார், நிருபர்
தஞ்சை.