பட்டுக்கோட்டை மே 09 பட்டுக்கோட்டை வட்டம் செண்டாங்காட்டில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களுக்கு பொது சுகாதாரத் துறை மருத்துவா் அபிநயா, சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினரால் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. முகாமை பட்டுக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவா் பழனிவேல் ஆய்வு செய்தாா்.

முகாமில் ஊராட்சித் தலைவா் கோவிந்தராசு, துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், ஊராட்சி உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்.