தஞ்சை மே 22: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள இந்தியன் வங்கியில் பணியாற்றும் பணியாளர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூன்று நாட்கள் வங்கி மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்காட்டுப்பள்ளியில் இந்தியன் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கி கிளையில் உதவி மேலாளர், கிளார்க் மற்றும் பணியாளர் என மூன்று பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானது.

இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்