தஞ்சை மே: 11, தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மூலம் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது, நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது, இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்த தொடங்கியுள்ளார்.

நேற்று தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு உங்களது காய்கறி கடைகள் மளிகை கடைகள் சிறியவர்கள் பெரியவர்கள் இறைச்சி கடைகள் டீக்கடைகளில் மற்றும் இயங்கின இவற்றில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டது, மதியம் 12 மணி அளவில் ஓட்டல்களை தவிர மற்ற காய்கறி மளிகை கடைகளில் இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டன, தஞ்சை மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டன.

முன்னதாக நேற்று முன்தினம் அரசு 10 மணி வரை தஞ்சை மாநகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது, ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டதால், ஜவுளிக்கடைகள் பலசரக்குக் கடைகள் பெரிய வணிக வளாகங்கள் ஏனெனில் கடைகளில் நேற்று முன்தினம் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி தேவையானவை பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர் பின்னர் 10 மணிக்கு மேல் தஞ்சை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது.

நேற்று காலையும் மாவட்டம் முழுவதும் அரசு தனியார் பேருந்துகள் இயக்கப்படாது, இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தஞ்சை புதிய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையம் பேருந்துகள் பயணிகள் இன்றி காணப்பட்டது, ஆட்டோ, ஷேர் ஆட்டோ வாடகை கார்கள் இயங்கவில்லை, டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன.

பர்மா பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன, இருப்பினும் பல இடங்களில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை நடந்தது, மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது, 12 இருசக்கர வாகனங்கள் கார்கள் சென்றன இவற்றை போலீசார் வழிமறித்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர், தஞ்சை கீழவாசல், அண்ணா சாலை, மாமா சாஹிப் மூளை, பர்மா பஜார், போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்வதைத் போலீசார் தடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

அத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களாக மருத்துவமனை பணியாளர்கள் மருந்து எடுத்து செல்லும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் பத்திரிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் முழு ஊரடங்கு யொட்டி அண்ணாசிலை கீழவாசல் போன்ற பகுதிகளில் சாலைகளில் முழுமையான தடுப்புகளை கொண்டு அடக்கப்பட்டது போலீசாரின் கண்டிப்பாக தேவை இன்றி சுற்றித்திரிந்தவர்கள் மதியம் முதல் குறைவாக காணப்பட்டனர் மேலும் கடும் வெயில் என்பதா மதியம் சாலையில் முற்றிலும் வெறிச்சோடியது இருப்பினும் மருத்துவமனைகளில் இயங்கினர் மருத்துவமனைகளுக்கு செல்வோர் மருந்து வாங்க செல்வோரை மட்டும் போலீசார் அனுமதித்தனர்,

தஞ்சை மாவட்ட எல்லையில் சீல் வைப்பு:

எஸ்.பி, தேஷ்முக் சேகர் சஞ்சய் தஞ்சை கூறும்போது, தஞ்சை மாவட்டம் சுற்றுப் பகுதியான எல்லைகளில் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது அத்தியாவசிய கடைகள் தவிர மற்றவர்களுக்கு தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பு அளிக்கின்றனர் தற்போதுவரை விதிகளை மீறி வெளியே செல்வோர் வாகனங்களின் உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறோம் அடுத்த சில நாட்களில் விதிகளை இன்னும் கூடுதலாக கடைபிடிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கூறினார்.

பாதுகாப்பை கடைபிடிப்போம்!, கொரோனாவை தடுப்போம்!!,, மனிதகுலத்தை காப்போம்!!!

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.