தஞ்சை மே 16: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வர்த்தக சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் விதிமுறைகளின் படி நடந்தது.

பட்டுக்கோட்டையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழக அரசு கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்றுமுதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மீன் கடைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வர்த்தக சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சப் கலெக்டர் பாலசந்திரா தலைமை வகித்து பேசுகையில், மார்க்கெட் பகுதியில் கடை வைத்துள்ள காய்கறி. இறைச்சி, மீன் கடைகளை மூடிப் பைபாஸ் சாலை. காசங்குளம், பேருந்து நிலையம், இடங்களில் கடைகளை அமைத்துக்கொள்ளலாம்.

கடைகளுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருக்க வேண்டும். கடைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியையும்‌, முக கவசம் அணிவதையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்..

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.