தஞ்சை ஏப்ரல் 27: தமிழகத்தில் கொரோனா 2 அலை பாதிப்பை தொடர்ந்து, பல்வேறு வழிபாட்டுத்தளங்கள் மூடப்பட்டுள்ளன, மக்கள் அதிகம் பிராத்தனைக்கு கூடும் பூண்டி மாதா சர்ச் தமிழக அரசு உத்தரவுக்கு இணங்க  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா சர்ச் மூடப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற கிறிஸ்துவ சர்ச்களில் ஒன்றானதும், தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்ததாக கிறிஸ்தவர்கள் தரிசிக்க விரும்பும் ஆலயமாக உள்ளது பூண்டி மாதா சர்ச். இங்கு தினம் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் என ஆயிரக்கணக்கான மக்கள் தினம் வந்து மாதாவை தரிசித்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 2 அலை பாதிப்பை தொடர்ந்து தமிழக அரசு வழிப்பாட்டு தலங்களை மூட உத்தரவிட்டது. இதற்கு இணங்க பூண்டி மாதா சர்ச் மூடப்படுகின்றது என்றும் , பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், அரசு அறிவிப்புக்கு பிறகு பேராலயம் திறந்து பக்தர்களுக்கு மாதாவை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் பேராலய அதிபர் பாக்கியசாமி தெரிவித்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.