தஞ்சை மே 19 தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 200க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் ரூபாய் 2 கோடி வரை அபதாரம் வசூலிக்கப்பட்டுள்ளது என எஸ்.பி எஸ் வி தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் நேற்று காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கையை எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் சென்று ஆய்வு செய்தார், அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை நேற்றுமுன்தினம் 17-ஆம் தேதி முதல் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஊரடங்கு விதிகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகன ஒட்டுநர்களிடம் ஈ-பதிவு உள்ளதா என சரிபார்த்து வருகின்றோம், இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரபடுத்தப்படும் எனவே ஈ-பதிவு அவசியம். .

மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக அபதாரமாக இதுவரை ரூ 2 கோடிக்கு மேல் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக 250 வழக்குகள் போடப்பட்டுள்ளன, 200க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ‍தொற்றை முன்னிட்டு இந்த நடவடிக்கை இனி மேலும் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை