தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருபுவனம் ஊராட்சியில் கொரோனா தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படியும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல் மற்றும் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வழிகாட்டுதலின் படியும் திருபுவனம் பேரூராட்சியில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில் ஒரு பகுதியாக பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில், திருபுவனம் கடைவீதியில் பொதுமக்கள் முன்பு கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு நாடகம் கலைக்குழு வாயிலாக நடத்தப்பட்டது.

மேலும் திருபுவனம் பேரூராட்சி பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/