தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம், நெடுவாக்கோட்டையில் ஒன்றிய ரெட்கிராஸ் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணா்வு கூட்டம் நடந்தது.

ஒன்றியச் செயலாளா் அக்பா் அலி தலைமை வகித்தார். துணைச் செயலாளா் சேட்டு முன்னிலை வகித்தார். இதில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தடுப்பு ஊசி, முகக் கவசம் அணிவதன் அவசியம், சா்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளோர் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சி ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

மேலும், வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சக்தி நன்றி கூறினார்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்