தஞ்சாவூர் ஆக :10-தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தொற்று குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் முக கவசம், சானிடைசர், அடங்கிய பெட்டகத்தையும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று குறித்தும் கை கழுவும் முறை செயலாக்கம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார், பின்னர் ராமநாதன் ரவுண்டானா பகுதியில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ‍கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கொரோனா ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என் பதை நான் அறிவேன், அதை தவிர்க்க பொது இடங்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக உங்கள் முக கவசம் அணிவேன். மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியில் கடைப்பிடிப்பேன். சோப்பும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வேன். நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதோடு மற்றவர்களையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுவேன்.

இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நாம் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை உன் கடைப்பிடிப்பேன் மற்றவர்களையும் கொரோனாவிற்கு பொருத்தமான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்துவேன் மூன்றாம் அலை தடுக்க எப்போதும் விழிப்புடன் இருப்பேன் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் கணேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து தஞ்சை ராமநாதன் ரவுண்டானா பகுதியில் பஸ், லாரி, கார், இருசக்கர வாகனம், ஆட்டோவில் பயணம் செய்த பொதுமக்களை முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் ,என அறிவுறுத்தினார்.

ஒரு பெருந்தொற்றுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியில் எஸ்பி ரவாளி பிரியா, ஆர்டிஓ வேலுமணி, தாசில்தார் பாலசுப்பிரமணியன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/