லயன்ஸ் சங்கங்கள் நடத்தும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாம்!.

தஞ்சை ஜன 11…
தஞ்சாவூர் AMC அலுமினி விர்ச்சுவல் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், தஞ்சை மருத்துவக் கல்லூரி குருதி வங்கி, பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி மற்றும் மேக்ஸ்லினா மெமோரியல் ஹெல்த் சர்விஸ் டிரஸ்ட்
இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாம் நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெறுகின்றது.

இந்த விழாவிற்கு Lion A. ஜாகீர் உசேன்,தலைவர், தஞ்சாவூர் AMC அலுமினி விர்ச்சுவல் லயன்ஸ் சங்கம் தலைமை வகிக்கின்றார்,
முன்னிலை அருட்சகோதரி. முனைவர். மரியம்மாள்
செயலாளர், பான் செக்கர்ஸ் காங்கிரிகேஷன்ஸ், அருட்சகோதரி. முனைவர். கேத்தலினா முதல்வர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மற்றும் Lion A. சாகுல் ஹமீது தலைவர், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம் வகிக்கின்றனர்.

கொரோனா மற்றும் குருதிக் கொடை விழிப்புணர்வு என்கின்ற தலைப்பில் டாக்டர் RVS. வேல்முருகன், மாவட்ட குருதி பறிமாற்ற மருத்துவ அலுவலர், தஞ்சை மருத்துவக்கல்லூரி பேசுகின்றார்,

குருதிக் கொடை முகாமை லயன்ஸ் பேரியக்க நல்லெண்ணத் தூதுவர் விருது பெற்ற நட்பு நாயகன் PMJF Lion S. முகமது ரபி முன்னாள் மாவட்ட ஆளுநர் துவக்கி வைக்கின்றார்.

இவ்விழாவிற்கு வாழ்த்துரை Er S. முத்துக்குமார் மாவட்ட பொருளாளர், செஞ்சிலுவை சங்கம்,
திருமதி M.வேலுமணி கோட்டாட்சியர் தஞ்சாவூர்,
மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் Lion அமல்.ஸ்டாலின் பீட்டர் பாபு ஆகியோர் வழங்குகின்றனர்.

நிகழ்வில் கொரோனோ மற்றும் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வும், மாணவிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

முன்னதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் லயன் ஸ்டாலின் மற்றும் பான் செக்கர்ஸ் கல்லூரியில் பணிபுரியும் லயன் முனைவர் எஸ்தர் ஸ்டாலின் ஆகியோரின் திருமண நாள் சேவையாக தஞ்சை ஓசாணம் முதியோர் இல்லத்திற்கு உணவும் வழங்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

‍செய்தி : புயலரசு