தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். மின்சார சட்டம் 2020 ரத்து செய்ய வேண்டும். அனைத்தும் தனியார் மயமாக்கல் என்ற மத்திய அரசின் நடவடிக்கை கைவிட வேண்டும். கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரனா கால நிவாரணமாக மாதம் ரூபாய் 7500 வழங்க வேண்டும்.

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கும் படுமோசமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள மத்திய அரசு இதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சை ரயிலடி முன்பு 3~2~21 மாலை 4 மணிக்கு தொழிலாளர் தொகுப்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாநில செயலாளர் சி.ஜெயபால் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லை வனம். தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர் ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ் ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நிறைவாக ஏஐடியூசி மாநில செயலாளர் சி. சந்திரகுமார் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்‌. வங்கி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் க.அன்பழகன், அரசு போக்குவரத்து தொழிற்சங்க சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை மதிவாணன் சிஐடியு நிரவாகிகள் அன்பு, செங்குட்டுவன், ஐஎன்டியுசி தலைவர் ஏ.ரவிச்சந்திரன், தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், அப்பர் சுந்தரம்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி: க.சசிகுமார், நிருபர்
தஞ்சை