டிசம்பர் 28சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தமிழகத்தில் இன்று அதாவது திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்..

நாளையும், நாளை மறுதினமும் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது இந்த நாட்களில் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்று அறிவித்துள்ளது.

செய்தி : ம.செந்தில்குமார்.