ஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அழகுசுந்தரம் (85) என்பவரது உடல் மற்றொரு சமூகத்திற்கு சொந்தமான இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அழகு சுந்தரம் (85). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து இவரது உடல் கிருஷ்ணாபுரத்தில் உள்ள மயானத்தில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அழகு சுந்தரத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் மற்றொரு சமூகத்திற்கு சொந்தமான இடுகாடு என்றும், புதைக்கப்பட்டவர் வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் புதைக்கப்பட்ட உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்யக் கோரி ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து கிருஷ்ணாபுரத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து இருதரப்பு சமூகத்தினருடன் வருவாய் மற்றும் காவல்துறையினர் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இது போன்ற தொற்றுக்காலத்தில் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அதனை முறியடிப்பது தான் முதல் பணியாக இருக்க வேண்டும், அரசு மற்றும் காவல் துறையினரின் ஆற்றலை இது போன்ற நேரத்தில் இப்படியான ‍வேலைகளுக்கு பயன்படுத்துவது அரசு நீர்வாகம் தொற்றைக்கட்டுப்படுத்த திறம்பட செயல் பட முடியாமல் போகும் என்று அரசு அலுவலர்கள் கூறுகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்