தஞ்சாவூர் செப் 27: வெள்ளம் பெரம்பூர், தென் பெரம்பூர் இப்பகுதியில்குறுவை சாகுபடி செய்துள்ளார், நெல் முட்டைகளை கொள்முதல் செய்வதில் நுகர்பொருள் வாணிபக் கழகம் காலதாமதம், உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

திருவையாறு அடுத்த வெள்ளாம் பெரம்பூர் கிராமத்தில் 1120 ஹக்டர் குறுவை சாகுபடி செய்துள்ள அதே போல் தென்படும் 250 ஹக்டர் குறுவை சாகுபடி செய்துள்ளனர். இவை அனைத்தும் குருவை பட்டத்தில் பம்புசெட் மூலம் நடவு செய்யப்பட்டவையாகும்.

தற்போது தொடர் மழையின் காரணமாக அறுவடை செய்த சுமார் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கிறது நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் போது ஈரப்பதம் 17 சதவீதம் உள்ள நெல்லையை தான் கொள்முதல் செய்கிறார்கள்.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் மழையின் காரணமாக 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும், நாளொன்றுக்கு 3000 முட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் மேலும் கூடுதலாக ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உடனடியாக தமிழக அரசு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/