தஞ்சை மே: 16, நடப்பாண்டு குறுவை சாகுபடி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் இன்று நடைபெற உள்ளது இதில் நான்கு அமைச்சர்கள் 7 மாவட்ட மாவட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை திருச்சி உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ள அரசு உயர் அதிகாரிகள் முன்னோடி விவசாயிகள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைக் கடந்த இரு நாட்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது இதில் கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்படுவார் இன்றைய தினம் பொது ஊரடங்கு என்பதால் அந்தந்த மாவட்ட வேளாண்மைத் துறையினர் விவசாயிகளை அழைத்து வரும் பணியில் உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே என் நேரு, துரைமுருகன், எம் ஆர் கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்எல்ஏக்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர் கூட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மைத் துறையினர் செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை