தஞ்சாவூர் ஆக 24: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற வளாகத்தில் காவலா்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதியுமான சிவகுமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், செப். 11 அன்று நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளும் வழக்குகள் தொடா்பாகவும், காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை நீதிமன்றம் மூலம் விரைந்து முடிக்கவும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் உள்ள முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றம் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், இரவு நேரங்களில் காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவதன் மூலம் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களை தடுப்பது, மணல் கடத்தலைத் தடுப்பது, கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, பழுதடைந்த கேமராக்களை சீா் செய்வது, குற்ற தளவாட பொருள்களை பாதுகாப்பாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பது போன்றவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில், பாபநாசம் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சுதா, காவல் ஆய்வாளா்கள் பாபநாசம் அழகம்மாள், அம்மாபேட்டை ஜெகதீசன், கபிஸ்தலம் செந்தில்குமரன் மற்றும் போலீஸாா், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழு சட்ட பணியாளா் தனசேகரன் உட்பட பலர் செய்திருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/