தஞ்சை, அக்டோபர், 6- உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலையை கண்டித்தும் அவர்களுக்கு அறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை கலெக்டர் அலுவலக வாயிலில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி என்ற இடத்திற்குச் செல்லும் போது அவருடைய பாதுகாப்பு வாகனம் போராடிய விவசாயிகள் மீது மோதி முன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அந்த வாகனத்தை ஒட்டியவர் உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அவர்களின் மகன் என்று கூறப்படுகின்றது அதனை உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மறுத்து வருகின்றார்.

இதில் மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜேம்ஸ், வல்லம் நகர தலைவர் பாட்ஷா, முன்னாள் வல்லம் பேரூராட்சி தலைவர் பொன்னுசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் வரதராஜன், திருவையாறு நகர தலைவர் பசுபதி, மாவட்ட செயலாளர் யேசு, மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன், எஸ்சிஎஸ்டி பிரிவு மாநகரத் தலைவர் அருண் சுபாஷ், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் அமர்சிங், கலைப்பிரிவு தலைவர் இருதயம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மகேந்திரன், கக்கரை சுகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வடிவேல், சாந்தாராமதாஸ், கலைச் செல்வி மற்றும் துணை அமைப்பு தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர், மாவட்ட பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/