தஞ்சை சூலை 11: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை யானது ரூ 100யை தாண்டி செல்லும் நிலையிலும் இந்திய ஒன்றிய அரசு அதனை பற்றி கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் உள்ளது, அதேப்போல் கொரோனாவை தடுத்திட தடுப்பூசி மக்களுக்கு கட்டாயம் என்று உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றனர்,

இது போன்ற இக்கட்டான சூழலில் ஆளும் பி.ஜே.பி அரசு இதைப்பற்றி கவலைப்படாமல் இராமர் கோயில் கட்டுவது, கட்சி பிரமுகர்களை தூண்டி மாநிலங்களை பிரிப்பது போன்ற கோரிக்கைகளை எழுப்புவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்தச் சூழலில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்டத் துணைத் தலைவா் அன்பரசன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டப் பொருளாளா் வயலூா் ராமநாதன், பொதுச் செயலா் ஆண்டவா், வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவா் சதா. வெங்கட்ராமன், மகளிா் காங்கிரஸ் மாவட்டச் செயலா் சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/