தஞ்சை ஜன:9, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் , இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போன விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தஞ்சை ரயில்வே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார் துணைத்தலைவர் லட்சுமி நாராயணன் வரவேற்றார் மாநகர மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் ஜேம்ஸ் தொடங்கிவைத்தார், மன்னார் மாவட்ட தலைவர் நாஞ்சில் கி வரதராஜன் விவசாய பிரிவு பொதுச் செயலாளர் தங்கராஜ், மாநில செயலாளர் மணிவண்ணன், பொதுச்செயலாளர்கள் இயேசு, கோவி மோகன், பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்ட பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களில் பலர் உருளைக்கிழங்கு மிளகாய் கத்தரிக்காய் தக்காளி போன்ற காய்கறி மாலை அணிந்து இருந்தனர் கரும்பு வாழை நெட்கதிர் ஆகியவற்றை கையில் ஏந்தி ஏற்கலப்பை போன்றவை கையில் ஏந்தி மத்திய மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர் இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்