தஞ்சையில் நடந்த பல்வேறு குற்றச்செயல்களில் சிறப்பாக பணியாற்றி துப்பு துலக்கி திருட்டு பொருட்களை மீட்க செயலாற்றிய தனி விரல் ரேகை கூடத்தை சார்ந்த விரல் ரேகை நிபுணர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியபோலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி மற்றும் மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா ஆகியோர் வழங்கினர்.

அந்த வகையில் தஞ்சை மாவட்ட வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் காணவும், கொள்ளை போன பொருட்களை மீட்கவும் சிறப்பாக பணியாற்றிய கைரேகை பிரிவை சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பளர் (வி.ரே) ஹேமா,
மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் (வி.ரே) அமலா, கீதா, கார்த்திக், சங்கவி, சிலம்பரசன் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா ஆகியோர் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/