தஞ்சாவூர் அக் 13: நகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சார்பில் இன்று மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மேட் அணிவதின் அவசியம் குறித்தும், கார்களில் சீட்பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை பெரிய கோவில் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா தலைமை தாங்கி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஹெல்மேட் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இலவசமாக ஹெல்மேட் வழங்கி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதேப்போல் ஹெல்மேட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படாமல் இருக்க அனைவரும் ஹெல்மேட் அணிய வேண்டும், கண்டிப்பாக காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும், அனைவரும் சாலைவிதிகளை சரியாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/