தஞ்சை பிப் 26, இந்த கொடிய கொரோனா இன்னும் எத்தனை மாமனிதர்களை மாளச் செய்யும் என்று நாம் அறியோம், கொரோனாவிலிருந்து தோழர் தா.பாண்டியன் அவர்கள் மீண்டாலும் அது ஏற்படுத்திய நுரையீரல் தொற்று மற்றும் சிறு நீரக பிரச்சனையால் அன்னார் இன்று காலை சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

சிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது (டேவிட்) – நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்டியன் (18.5.1932). தோழர் தா பாண்டியன் அவர்களின் பெற்றோர் ஆசிரியராக பணியாற்றிவர்கள்.

சிறிய வயதில் சிறந்த பேச்சாற்றல் உடையராக விளங்கியவர் கல்லூரி காலத்தில் அவர் மாணவர் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டு வென்றவர், அது மட்டுமல்லாது, மாணவத்தலைவராக தேர்வானவர்கள் எவரும் கல்லூரி இறுதி ஆண்டு தேறியதில்லை ஆனால் அய்யா அவர்கள் அதனை சிறப்புடன் தேறினார்.

1991 ஆம் ஆண்டு ராசிவ் ‍கொலையில் தோழர் தா.பாண்டியன் அவர்களும் இறந்து விட்டார் என்றே அறிவிக்கப்பட்டது, தூக்கி எறியப்பட்ட தா.பாண்டியன் அவர்கள் சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்தார். அதே மருத்தவ மனையில் தான் இராசிவ் காந்தி அவர்களின் உடலும் வைக்கப்பட்டிருந்தது, சென்னையின் பொது மருத்துவமனைக்கு இராசிவ் அவர்களின் ‍‍பெயர் வரக் காரணமாக இருந்தார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர், இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர்.

16 ‍ஆண்டுக்கு மேல் அவர் ஜனசக்தி என்னும் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழுக்கு ஆசிரியராக தனது பங்களிப்பை கொடுத்து 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள் 6 மொழி பெயர்ப்பு நூல்கள் என வெளியீட்டுள்ளார் அதில் மேடைப் பேச்சு மற்றும் பொதுவுடமையாளர்களின் வரும்காலம் நூற்கள் பெரிதும் பேசப்பட்டது.

ஒரு பொதுவுடமையாளராக விளங்கினாலும் அவர் பெரியார் அவர்களை நான் தந்தை பெரியார் என்றே அழைப்பேன் என்று பெரியாரியல் கருத்துகளுடன் உடன் பட்டுச் செயல்பட்டவர், பொதுடைமையாளர்களில் தனித்துவமான தோழர் தா.பாண்டியன் அவர்கள் தனது 88 ஆம் வயதில் மறைவுற்றார்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை.