தஞ்சாவூர் சூலை.24–
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான தோழர் சங்கரய்யாவின் நூற்றாண்டு தொடக்க விழா, கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு கலந்து கொண்டு, தோழர் சங்கரய்யா குறித்து விளக்கிப் பேசினார்.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாணிக்கம், இந்துமதி, ரெங்கசாமி, சிதம்பரம், பாஸ்கர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செங்கமங்கலம் ராஜமாணிக்கம், சிபிஎம் நகரக்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.எஸ்.விழா அரங்கில் நகரக்குழு கூட்டம் நீலமோகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி, நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, இன்றைய அரசியல் நிலவரம், கட்சி வரலாறு, செயல் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். 

செய்தி க,சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/