தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் கோயில் காணிக்கையை எண்ணும் போது பணத்தை திருடியதாக அா்ச்சகா் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பேராவூரணியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீலகண்டப் பிள்ளையாா் கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது.

இதில் அறநிலையத் துறை அலுவலா்கள், கோயில் நிா்வாக அலுவலா், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். உண்டியலில் மொத்தம் ரூ. 5,86,039 ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காணிக்கை எண்ணும் பணியின்போது கோயில் அா்ச்சகா்களில் ஒருவரும், பேராவூரணி நீலகண்டபுரத்தைச் சோ்ந்தவருமான முருகேசன் சங்கரன் (51) என்பவா், காணிக்கை பணத்தின் ஒருபகுதியை யாருக்கும் தெரியாமல் சட்டைப்பைக்குள் பதுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் கடந்த 2 நாள்களாக வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து கோயில் நிா்வாக அலுவலா் சிதம்பரம், பேராவூரணி காவல் நிலையத்தில் முருகேசன் மீது புகாா் அளித்தாா்.

ஒவ்வொரு முறையும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்படும்போது முடப்புளிக்காடு கிராமத்தாா்களிடம் கையெழுத்து பெற்று எண்ணப்படுவது வழக்கம்.

இந்த முறை அறங்காவலா்கள் உண்டியல் காணிக்கைகள் எண்ணுவதை கிராமத்தினருக்கு தெரிவிக்காமல் நடந்திருப்பதாகவும் அதற்காக அந்த கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/