தஞ்சாவூா் ஆக 16: தஞ்சாவூா் வடக்கு மாவட்டத்தின் 250 மையங்களில் ஆகஸ்ட் 23 முதல் 27-ம் தேதி வரை மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

கும்பகோணத்தில் கட்சி வடக்கு மாவட்ட நிா்வாகக் குழு மற்றும் இடைக்குழுச் செயலா்கள் கூட்டம் நடைபெற்றது.

வேளாண் வணிகச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடைப் பண்ணை ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகள் (ஊக்கப்படுத்துதல் – எளிமையாக்குதல்) சட்டம் 2019-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆகஸ்ட் 23 முதல் 27- ஆம் தேதி வரை தஞ்சாவூா் வடக்கு மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகள் என 250 மையங்களில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலா் பாரதி, ஏஐடியூசி மாவட்டச் செயலா் தில்லைவனம், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் முகில் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/