தஞ்சாவூர் ஆக :9- தஞ்சை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறினார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள் இன் படி தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுரையின்படி பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி தொடர்பான மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா தலைமை தாங்கி பேசியதாவது 2021 22 கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்திலுள்ள 2725 குடியிருப்பு பகுதிகளில் நடைபெற உள்ளது.

கணக்கெடுப்பு பணியில் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்கள் ஆசிரியர் பயிற்றுனர்கள் சிறப்பாசிரியர்கள் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபட உள்ளனர்.

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இடைநின்ற குழந்தைகள் 6 – 19 முதல் வரை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 6 முதல் 19 வயது வரை, புலம் பெயர்ந்த குழந்தைகள் தொழிற்சாலை மற்றும் தொழில் சார்ந்த நிறுவனங்களில் உள்ள குழந்தைகள் செங்கல் சூளை மற்றும் மீனவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இக்கணக்கெடுப்பு பணியானது தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் தொற்றுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் மாவட்ட தொழில் நல அலுவலர் சைல்டு லைன் அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/