தஞ்சாவூர் ஆக, 28- தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் மாணவிகள் சேர்க்கை துவங்கியது.

தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 21 22 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடங்கப் பட்டுள்ளது.

பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய சான்றிதழ் கணினி மேலாண்மை நகை மதிப்பீடு அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழுடன் கூடிய பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது/

இந்த ஆண்டுக்கான பயிற்சி விண்ணப்பங்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரி www.tncu.tn.gov.in விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் உடன் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மாற்று சான்றிதழ் சாதி சான்றிதழ் ஆகியவற்றின் அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்கள் நான்கு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவு தபால் அல்லது கூரியர் மூலம் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த பட்ச வயது பதினேழு அதிகபட்ச வயது வரம்பு இல்லை ஆண் பெண் இருபாலரும் சேரலாம் பயிற்சி காலம் 36 வாரங்கள் பயிற்சி கட்டணம் ரூபாய் 14,850, ஆகும் விவரங்களுக்கு சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மருத்துவக்கல்லூரி சாலை தஞ்சாவூர் என்ற முகவரியையோ அல்லது 04362 -238253 அல்லது 237426 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் மனோகரன் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/