தஞ்சாவூர் செப் 14: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே புனல்வாசல் புனித ஆரோக்ய அன்னை மேல்நிலைப்பள்ளியில் அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு பயிற்சி மைய தொடக்க விழா முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்தது.
1993-இல் பள்ளி இறுதி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைந்து ஊரகப் பகுதி மாணவா்களின் நலன் கருதி புதுக்கோட்டை தன்னாா்வலா் போட்டித் தோ்வு பயிற்சி மையத்தோடு இணைந்து இந்தப் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளனா்.
பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போது பள்ளி முதல்வராக இருக்கும் அருள் தந்தை ஜான்சன் எட்வா்டு, ஐ.ஆா்.எஸ். அதிகாரி ஜஸ்டின், வட்டாட்சியா் அருள்ராஜ், எலும்பு முறிவு சிறப்பு மருத்துவா் துரை. நீலகண்டன் ஆகியோா் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசினா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/