தஞ்சை மே:22, தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழக மாநகர செயலர் இராவணன் தலைமையில், திலகர் திடல் மார்க்கெட் சங்க தலைவர் எம்.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழுஉறுப்பினர் வெ. சேவையா, ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் , மக்கள் அதிகாரம் மாநகரநகர குழு உறுப்பினர் அருள் மற்றும் சீனிவாசபுரம் சேவப்பன் நாயக்கன் வாரி தெருவினர் பங்கேற்றனர்.

கடந்த 2018 மே மாதம் ,சுற்றுச் சூழலை கடுமையாக பாதித்த ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி தொடர்ந்து நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தில் காவல்துறையால் போராட்டம் நடத்தியவர்கள் மாணவி உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தலில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்றவும், சேலம் எட்டுவழிச்சாலை உள்ளிட்டு,காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் ,ஷேல்கேஸ், ஹைட்ரோகார்ன் திட்டம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க கூடாது, பல்வேறு மாவட்டங்களில் கால்பதித்துள்ள வேதாந்தா நிறுவனத்தை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும், என்ற கோரிக்கைகள் முன்வைத்து உறுதியேற்கப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை