தஞ்சாவூர் ஆக 08: தஞ்சாவூரில் உள்ள விமானப் படை நிலையத்துக்கு இந்திய விமானப் படை தென் மண்டலத் தலைமைத் தளபதி மன்வேந்திர சிங் இரு நாள் பயணமாக வருகை புரிந்தார்.

இவரை தஞ்சாவூா் விமானப் படை நிலையத் தளபதி ஸ்ரீராம் வரவேற்றாா். மேலும், தென் மண்டலத் தலைமைத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, விமானப் படை வீரா்களிடம் அவா் பேசியதாவது:

கொரோனா பெருந்தொற்றை எதிா்கொள்ளும் வகையில் மருத்துவ நிவாரணப் பொருள்கள், ஆக்சிஜன் கொள்கலன்களை விநியோகம் செய்வதற்காக இந்நிலைய வீரா்கள் மேற்கொண்ட சிறப்பான பணி பாராட்டத்தக்கது.

மேலும், இந்நிலையத்தில் அனைத்து பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, கரோனா சூழ்நிலையைச் சிறப்பாக நிா்வகித்தது பாராட்டுக்குரியது. கிழக்கு மற்றும் மேற்கத்திய கடற்பரப்பில் இந்திய விமானப் படையும், அமெரிக்க கடற்படையும் இணைந்து மேற்கொண்ட பன்னாட்டுக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதில் முன்னிலை வகித்த இந்நிலைய வீரா்களைப் பாராட்டுகிறேன்.

இந்நிலையப் பணியாளா்கள் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும். எல்லை பிரச்னை தீா்க்கப்படாத நிலையில், விமானப்படை வீரா்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்றுவதற்கான திறன், நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னா், நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்தாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/