தஞ்சாவூர் நவ: 17- தஞ்சை மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளிலும் மாதிரி பூங்கா அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சிகள் நிர்வாகத் துறையின் சார்பில் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட வேண்டிய பூங்காக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது ஒவ்வொரு பேரூராட்சிகள் ஒரு மாதிரி பூங்கா அமைக்கப்பட வேண்டும் கம்பி வேலியுடன் நடைபாதை மற்றும் சிறுவர் விளையாட்டு இடம் ஆகியவை கண்டிப்பாக அமைக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும், பூங்காக்களில் பராமரிப்பு குடியிருப்போர் நல சங்கம் பொறுப்புக் ஒப்படைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி சார்பில் நடைபெற்ற தடுப்பூசி போடும் முகாம்களில் சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா (வருவாய்) உதவி செயற்பொறியாளர் ராஜா அனைத்து ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/
