தஞ்சாவூர் அக் 29: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு மேற்கொண்டனர்.

பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில், மொத்தம் 32 வார்டுகளில், இன்று 120 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 டிப்பர் லாரிகள், 6 சிறிய வாகனங்கள், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டை நகர் முழுவதும், இந்த கூட்டு தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம், நகரைச் சுத்தப்படுத்துவது என வரைவுத் திட்டம் போட்டு அதனை செயல்படுத்தி வருகிறது.

வார்டு-18 , கோத்தகிரி சாலை பகுதியில் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்வதினையும், நகரப்பகுதியில் வாசிக்கும் பொதுமக்களிடம் நகராட்சி மூலமாக தினந்தோறும் முறையாக குப்பைகளை சுத்தம் செய்யப்படுதை குறித்து கேட்டு அறிந்தும் அருகில் உள்ள சமூக நலன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிப்பதற்காக வழங்கப்படும் குடிநீர் 20 லிட்டர் ரூ. 7ரூபாய்க்கும், 1 லிட்டர் ரூ. 1 ரூபாய்க்கு வழங்குவதை சுத்தமாக குடிநீர் வழங்கப்படுவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தும், வார்டு- 19 , அறந்தாங்கி சாலை பகுதியில் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

ஆய்வின் போது பட்டுக்கோட்டை சப் கலெக்டர் பாலச்சந்தர், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) மாகின் அபூபக்கர், வட்டாட்சியர் கணேஸ்வரன், நகராட்சி கட்டிட ஆய்வாளர் கருப்பையன், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/