தஞ்சாவூர் நவ :14- தஞ்சையை குழந்தை நேய மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைவோம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வலியுறுத்தியுள்ளார். குழந்தைகள் தினத்தையொட்டி தஞ்சை மாவட்ட குழந்தைகளுக்கு வாழ்த்து மடல் ஒன்றை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நேரில் பேச எனக்கு ஆவலாக உள்ளது. ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தினால் இக்கடிதம் மூலம் உங்களுடன் நான் பேசுவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன் குழந்தைகள் என்றாலே 0 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மகிழ்ச்சி குதுகுலம் கொண்டாட்டமாக இருக்க வேண்டியவர்கள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பிற்கான மற்றும் பங்கேற்பதற்கான உரிமைகள் உள்ளன.
இன்று 14ஆம் தேதி குழந்தைகள் தினம் அனைத்து குழந்தைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தருணத்தில் ஒவ்வொரு குழந்தையும் அவரவர் ஆரோக்கியம் விளையாட்டு கல்வி ஆகிய முன்னேற்றங்கள் உடன் சமூக செயல்பாடுகளில் அக்கறை காட்டி மாற்றம் தந்த மனிதர்களாக மாற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதுகுறித்து உங்களுக்கும் நீங்கள் மற்றவர்களுக்கும் உதவிடும் வகையில் சில ஆலோசனைகள் கூற உள்ளேன் யாரேனும் உங்களிடம் பாலியல் நோக்கத்தோடு முயற்சித்தால் அவர்களை தொட விடாது எதிர்த்து நில் சத்தமாக கூச்சலிட்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடு உங்களுக்கு நம்பிக்கை உள்ளவர்களிடம் உடையாக சொல்லிவிடு உங்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ள நம்முடைய 24 மணி நேர இலவச தொலைபேசி எண் சைல்டு லைன் 1098 மூலம் உதவிகள் இதன் மூலம் உனது பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் நம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும் இதன்படி 18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைக்கும் பூர்த்தியடையாத 21, ஆணுக்கும் திருமணம் நடத்தி வைப்பது தண்டனைக்கு உரிய செயல் குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006 இதை வலியுறுத்தியது எனவே இதில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சைல்டு லைன் 1098 அழைத்து உதவி கேளுங்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுக்கு உதவி செய்ய நானும் குழந்தைகள் நல மற்றும் பாதுகாப்பு சார்ந்த அலுவலர்களும் இருக்கிறோம், உதவும் மாவட்ட அலுவலர்கள் சிலர் துறைகளின் தொலைபேசி எண்களை பதிவிட்டுள்ளேன், உதவி தேவைப்படும்போது இந்த எண்களை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து காவல்துறை 100, சைல்டுலைன் 1098, பெண்களுக்கான உதவி எண் 181, மற்றும்1091, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/