தஞ்சை ஏப்ரல் 02 தஞ்சை மாவட்டத்தில் பணப்பட்டுவாடா எந்த வகையில் நடைபெற்றாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக தனி கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்.

வரும் சட்டமன்றத் தேர்தல் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 204 மண்டலத்திற்கும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவைகள் எங்கு செல்கின்றன வாகனத்தில் நடவடிக்கைகள் என்னென்ன என்பதை கண்காணிக்கும் விதமாக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனையடுத்து தஞ்சையும் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு செல்கின்றனவா வேறு எங்கேனும் வாகனங்கள் சென்று தேவையில்லாமல் நிறுத்த படுகிறதா என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

கூடுதலாக 34 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் இன்று வரை 1.44 கோடி ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் பட்டுவாடா எங்கேனும் செய்யப் படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது இதை மீறி யாரேனும் பணம் கொடுத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பணம் பட்டுவாடா செய்வதாக பொதுமக்களுக்கு தெரியவந்தால் 1950 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.