தஞ்சாவூர் சூலை 24 தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காமாட்சிபுரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு விவசாயிகளிடம் விரைவாக நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் சந்தை நலத்துறை சார்பில் மதியழகன் என்பவர் குறுவை சாகுபடி செய்வதற்கு அவருடைய சொந்த நிலத்திற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் விதைகள் ரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படும் உறங்கினேன் ஆய்வு செய்து கிடங்கில் ரசாயன உரங்களில் இருப்பு குறித்தும் அதனை பதிவேடுகள் மூலம் முறையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் அவரிடம் கேட்டு அறிந்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தங்குதடையின்றி விவசாயம் செய்வதற்கு ரசாயன உரங்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதனருகில் செயல்பட்டுவந்த குறிச்சி நியாய விலைக் கடையின் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அரசின் தரத்தையும் மேலும் பதிவேட்டில் உள்ள இருப்பு முழுமையாக உள்ளதா என மூட்டைகளை எண்ணிப் பார்க்கும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

வந்த நல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் துறையூர் மெயின் வாய்க்கால் தூர்வாரும் கொண்டு வருவதை நேரில் பார்வையிட்டு பணியை விரைவாக முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார் காமாட்சிபுரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு விவசாயிகள் நெல் கொள்முதல் செய்திட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வேளாண் உதவி இயக்குனர் முகமது பாருக் தாசில்தார் சந்தானம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ராஜு அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி க.சகிகுமார் நிருபர்.
https://thanjai.today/