தஞ்சாவூர் சூலை 21: தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பேராவூரணி ஒன்றியத்துக்குட்பட்ட குப்பத்தேவன் ஊராட்சியில் 2.9 கி.மீ. தொலைவுக்கு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.1.62 கோடியில் நடைபெற்று வரும் சாலைப் பணியைப் பாா்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியா், திருச்செல்வம் என்ற விவசாயிக்கு 20 கிலோ நெல்விதை, யூரியா போன்ற இடுபொருள்களை வழங்கினாா்.

தொடா்ந்து, செல்லப்பிள்ளையாா் கோவில் பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ. 2.40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் அளவுகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து, தவணைத்தொகை முறையாக வங்கிக் கணக்குக்கு வருகிறதா என பயனாளியிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலச்சந்தா், பேராவூரணி வட்டாட்சியா் ஜெயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான் கென்னடி, செல்வேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/