தஞ்சை ஏப்.27. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு எண்ணும் மையங்களில் 8 சட்டசபை தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்குக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர்  கோவிந்தராவ் வைத்தார். 

இந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வருகிற மே 2-.ல் தொடங்குகிறது,   தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டசபைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் எண்ணப்படுகிறது. அதேபோல் பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் தொகுதியில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியிலும் , பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதியில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.

இந்த வாக்குகள் எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ம. கோவிந்தராவ் இ.ஆ.ப, தொடங்கி வைத்தார், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கும் மேஜைகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் போது பதற்றம் அடையாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து தபால் வாக்கு என்பதற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன் மற்றும் சட்டசபைத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள். உதவி தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.