தஞ்சாவூர்- சன. 30: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தலை அமை தியாகவும், நேர்மையாக வும் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சி, அதிராம்பட்டிணம், பட்டுக்கோட்டை நகராட்சி, 20 பேரூராட்சிக ளின் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த கால அட்டவணை சென்னை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த 26ம் தேதி வெளியிடப்பட் து. இதன்படி தேர்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்புமனு பெறுதல் 28.1.2022ம் தேதியாகும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் வரும் பிப்.4ம் தேதியாகும். வேட்புமனு ஆய்வு பிப்.5, வேட்புமனு திரும்ப பெறுதல் பிப்.7ம் தேதியாகும். வாக்குப்ப திவு பிப் 19ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதியும், தேர்தல் நடவடிக்கை முடிவு பெறும் நாள் பிப்.24ம் தேதி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் மார்ச் 2ம் தேதியும், மறைமுகத் தேர்தல் மூலம் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற் றும் பேரூராட்சிக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்ட நாள் மார்ச் 4ம் தேதியாகும்.
இதை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தின் அனைத்து நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகள் முழுமைக்கும் தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வருகிறது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர் தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தலை அமைதியாக வும், நேர்மையாகவும். பாதுகாப்பாகவும் நடை பெற எல்லா விதத்திலும் மாவட்ட நிர்வாகத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
