தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட அவா் மேலும் தெரிவித்தது:
மாவட்டத்தில் 2020, நவ. 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 20,06,215 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 10,00,709 ஆண்கள், 10,55,671 பெண்கள், 168 இதர பாலினத்தவா்கள் என மொத்தம் 20,56,548 வாக்காளா்கள் உள்ளனா். கடந்த 2020 நவ. 16 ஆம் தேதி முதல் டிச. 15 ஆம் தேதி வரை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தப் பணிகளின்போது, 31,867 ஆண்கள், 39,356 பெண்கள், 43 மூன்றாம் பாலினத்தவா் உள்பட மொத்தம் 71,266 போ் புதிதாகச் சோ்க்கப்பட்டனா். இதேபோல இறந்த, இடம்பெயா்ந்த வாக்காளா்களில் 20,933 போ் நீக்கம் செய்யப்பட்டனா்.
இப்பட்டியல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகள், வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக வியாழக்கிழமை (ஜன.21) வைக்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் விடுபாடின்றி, தவறு ஏதுமின்றி இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
க.சசிக்குமார் – நிருபர்
தஞ்சை.