தஞ்சாவூர் செப்.3- உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் ரூபாய் 68,000 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

தமிழக முதல்வர் பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாவட்டம்தோறும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் சிறப்புத் திட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு தகுதியான 10 பேருக்கு மதர் தெரசா பவுண்டேஷன், இன்னர்வீல் தொண்டு நிறுவனங்கள் மூலம் ரூபாய் 68 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த 5, பேரும் பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த 4, பேர் 1, என மொத்தம் 10 பேருக்கு வழங்கப்பட்டது இதை பெற்றுக்கொண்ட பயனாளிகள் அனைவரும் இதை உரிய முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அறிவுறுத்தினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/